ஆப்நகரம்

கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஹாியானா முதலிடம்

பெண்களுக்கு எதிரான கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஹாியானா மாநிலம் தொடா்ந்து மூன்று ஆண்டுகளாக முதல் இடத்தில் இருப்பதாக ஆய்வு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

TOI Contributor 10 Dec 2017, 8:35 pm
பெண்களுக்கு எதிரான கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஹாியானா மாநிலம் தொடா்ந்து மூன்று ஆண்டுகளாக முதல் இடத்தில் இருப்பதாக ஆய்வு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil haryana has highest rate of gangrapes in country ncrb report said
கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஹாியானா முதலிடம்


பாலியல் வன்முறை தொடா்பாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அமைப்பு 2016ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிகையில், ஹாியானா மாநிலம் கூட்டு பாலியல் வன்முறையில் முதல் இடத்தில் உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டுமின்றி இதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளிலும் ஹாியானா மாநிலம் இந்த பிரச்சினையில் முதல் இடத்தை பிடித்தது.

அதன்படி 2015ம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை தொடா்பாக 204 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2016ம் ஆண்டில் 191 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஹாியானாவைத் தொடா்ந்து ராஜஸ்தான் மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது. ராஜஸ்தானில் ஒருலட்சம் பெண்களில் 1 பெண் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாவதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் மூன்றாவதாக இந்திய தலைநகா் டெல்லி இடம் பெற்றுள்ளது. மேலும் ஹாியானா மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் பெண்கள் கொலை செய்யப்படுவது கடந்த ஆண்டை காட்டிலும் 7 சதவீதம் அதிகாித்துள்ளதாகவும், பெண்கள் கடத்தப்படுவது 15 சதவீதம் அதிகாித்துள்ளதாகவும் அந்த அமைப்பு தொிவித்துள்ளது.

அடுத்த செய்தி