ஆப்நகரம்

பள்ளிக்கூட பாடத்திட்டத்தில் புனித நூல்களின் போதனைகள்

ஹரியானாவில் உள்ள பள்ளிக்கூடங்களின் பாடத்திட்டத்தில் மதங்களின் புனித நூல்களில் உள்ள போதனைகள் சேர்க்கப்படவுள்ளன.

TNN 3 Jul 2016, 6:02 pm
சண்டிகர்: ஹரியானாவில் உள்ள பள்ளிக்கூடங்களின் பாடத்திட்டத்தில் மதங்களின் புனித நூல்களில் உள்ள போதனைகள் சேர்க்கப்படவுள்ளன.
Samayam Tamil haryana texts from religious books to be included in school curriculum
பள்ளிக்கூட பாடத்திட்டத்தில் புனித நூல்களின் போதனைகள்


ஹரியானாவில் 6 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நல்லொழுக்கப் பாடத்தில் இந்து, இஸ்லாம், கிருஸ்துவம் மற்றும் சீக்கிய மதங்களின் புனித நூல்களில் இருக்கும் போதனைகள் பாடத்திட்டமாக இடம்பெற உள்ளன.

அதன்படி, பகவத் கீதை, திருக்குர்-ஆன், பைபிள் மற்றும் குரு கிரந்த சாஹிப் ஆகியவற்றிலிருந்து பாடத்திட்டம் உருவாகிறது.

இந்த நல்லொழுக்கப் பாடத்திற்கான வகுப்புகளை இம்மாதம் முதலே தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடக்க நிகழ்வு அம்மாநிலத்தின் குருஷேத்திர பல்கலைக்கழகத்தில் ஜூலை 5ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது என்று ஹரியானாவின் கல்வித்துறை அமைச்சர் ராம் பிலாஸ் சர்மா தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி