ஆப்நகரம்

ஹரியானா: இளம்பெண்களுக்கு செல்போன், இண்டர்நெட், ஜீன்ஸ், தடை!

ஹரியானா மாநில கிராமத்தில் உள்ள இளம்பெண்கள் ஜீன்ஸ் அணியக் கூடாது, செல்போன், இண்டர்நெட் பயன்படுத்தக்கூடாது என்று விதிக்கப்பட்ட தடை, நேற்று முதல் அமலுக்கு வந்தது.

Samayam Tamil 18 Apr 2018, 6:23 am
ஹரியானா மாநில கிராமத்தில் உள்ள இளம்பெண்கள் ஜீன்ஸ் அணியக் கூடாது, செல்போன், இண்டர்நெட் பயன்படுத்தக்கூடாது என்று விதிக்கப்பட்ட தடை, நேற்று முதல் அமலுக்கு வந்தது.
Samayam Tamil haryana mobile jeans


ஹரியானா மாநிலத்தில், முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்குள்ள சோனிபட் மாவட்டத்தில் உள்ள இஷாபூர்கெரி கிராமத்தின் ஊராட்சி தலைவராக இருந்து வருபவர் பிரேம்சிங்.

இவர் அந்த கிராமத்தில் உள்ள இளம்பெண்கள் ஜீன்ஸ், டி சர்ட் போன்ற மாடர்ன் உடைகள் அணியவும், செல்போன், இண்டெர்நெட் பயன்படுத்தவும் தடை விதித்திருந்தார். இதைத் தொடர்ந்து இஷாபூருக்கு அருகில் உள்ள மற்ற ஊராட்கிளும் இந்த தடை உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால், இஷாபூர் கிராம பெண்கள் இந்த உத்தரவை நிராகரித்தனர்.

இந்நிலையில், இஷாபூர் கிராமத்தில் இளம் பெண்கள் செல்போன், இண்டர்நெட் பயன்படுத்தவும், ஜீன்ஸ் போன்ற மாடர்ன் உடைகள் அணியவும் விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்துள்ளதாக நேற்று அறிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், , மாடர்ன் உடைகள், செல்போன் இண்டர்நெட் மூலம் இளம்பெண்கள், ஆண்களுடன் எளிதாக தொடர்பு கொள்ள முடிகிறது என்றும், இதனால் அவர்கள் காதல் வயப்பட்டு, பெற்றோருக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொள்வதாகவும் தெரிவித்தார். இதை தடுக்கவே தற்போது இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் கூறினார்.

அடுத்த செய்தி