ஆப்நகரம்

கொல்கத்தாவுக்கு அரசியல் அறிக்கை அளிக்க வரவில்லை: ராகுல்

மேம்பாலம் இடிந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை பார்க்கவே கொல்கத்தாவுக்கு வந்தேன். அரசியல் அறிக்கை அளிக்க வரவில்லை என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

TNN 2 Apr 2016, 11:49 am
கொல்கத்தா: மேம்பாலம் இடிந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை பார்க்கவே கொல்கத்தாவுக்கு வந்தேன். அரசியல் அறிக்கை அளிக்க வரவில்லை என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil have come here to meet injured do not want to give a political statement rahul
கொல்கத்தாவுக்கு அரசியல் அறிக்கை அளிக்க வரவில்லை: ராகுல்


மேற்குவங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் கடந்த 2009-ஆம் ஆண்டு 2.2 கிலோமீட்டர் தூரமுள்ள மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கியது. இந்நிலையில், மேம்பால கட்டுமான பணிகளின் போது, அந்த பாலம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கி, சுமார் 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கொல்கத்தா வந்த ராகுல், விபத்து நடைபெற்ற பகுதியை முதலில் பார்வையிட்டார். தொடர்ந்து, கொல்கத்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற ராகுல், அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ராகுல், விபத்தில் படுகாயமடைந்தவர்களை பார்க்கவே வந்தேன். அரசியல் அறிக்கை அளிக்க வரவில்லை.இது ஒரு துயரமான சம்பவம். ஒருவாரால் முடிந்த அளவுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நான் நம்புகிறேன் என்றார்.

அடுத்த செய்தி