ஆப்நகரம்

Arun Jaitley: தீவிர சிகிச்சை பிரிவில் அருண் ஜெட்லி; நலம் விசாரிக்க விரையும் குடியரசுத் தலைவர்!

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 16 Aug 2019, 12:24 pm
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜெட்லி, சுவாசப் பிரச்சனை காரணமாக கடந்த 9ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Samayam Tamil Arun Jaitley


இவரது உடல்நிலை தற்போது மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று அருண் ஜெட்லியின் உடல்நலம் குறித்து விசாரிக்க உள்ளார்.

Also Read: அரை மணி நேரம் படிச்சும் ஒன்னும் புரியல- காஷ்மீர் வழக்கில் தலையில் கொட்டிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!

தற்போது நரம்பியல், இதய நிபுணத்துவ மருத்துவர்கள் அருண் ஜெட்லியின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஜெட்லிக்கு உடல்நிலை சரியில்லை.

Also Read: காஷ்மீர் விவகாரத்தில் அடுத்த அதிரடி; ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இன்று முக்கிய ஆலோசனை!

இதன் காரணமாக கடந்த மக்களவை தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. கடந்த ஆண்டு மே 14ஆம் தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் தனது நிதியமைச்சக பணியை தொடர முடியவில்லை.

Also Read: வாஜ்பாய் முதலாண்டு நினைவு தினம்- குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் அஞ்சலி!

இவருக்கு பதிலாக பியூஷ் கோயல் நிதியமைச்சகத்தை கூடுதலாக கவனித்து வந்தார். ஏப்ரல் 2018 முதல் அலுவலகம் வருவதை தவிர்த்துக் கொண்டார். கடந்த செப்டம்பர் 2014ல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி