ஆப்நகரம்

அசாமில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலி

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

TNN 18 May 2016, 3:17 pm
திஸ்பூர் (அசாம்): அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil heavy rain in assam 10 dead
அசாமில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலி


அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை பெய்த கனமழை காரணமாக கரிம்கஞ்ச் மாவட்டத்தின் சோனாச்சிரா கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

அதேபோல், ஹைலகண்டி மாவட்டத்தில் இரு வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் ஆகியோர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி