ஆப்நகரம்

மும்பையை முடக்கிய மழை! : தாழ்வான பகுதிகளில் வெள்ளம்

நேற்று இரவு மும்பையில் பெய்த பேய் மழை காரணமாக, மும்பையின் பல முக்கிய பகுதிகள் முடங்கியது. அதோடு தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

TOI Contributor 29 Jun 2017, 1:17 am
மும்பை : நேற்று இரவு மும்பையில் பெய்த பேய் மழை காரணமாக, மும்பையின் பல முக்கிய பகுதிகள் முடங்கியது. அதோடு தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
Samayam Tamil heavy rain lashes mumbai water logging reported in many areas
மும்பையை முடக்கிய மழை! : தாழ்வான பகுதிகளில் வெள்ளம்


மும்பையின், தாதர், சயன், கிங் சர்க்கிள், ஹிந் மாதா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பல பகுதிகளில் இன்னும் நீர் வடியாததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இரவு ஒரு மணி நேரத்தில் விக்ரோலி பகுதியில் 24 மிமீ, குர்லா- 14 மிமீ, திண்டுசிஹி -18 மிமீ, அந்தேரி மற்றும் கோரேகன் பகுதியில் 13 மிமீ மழை பதிவாகியுள்ளது.



பலபகுதிகளில் இருப்புப் பாதையில் மழை நீர் சூழ்ந்துள்ள நிலையில், மின்சார ரயில்கள் இயக்கப்பட்டாலும் வேகமாக செல்வதை தவிர்க்குமாறு ரயில் ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மறுபுறம் சாலை போக்குவரத்து பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு முடங்கியுள்ளது.

அடுத்த செய்தி