ஆப்நகரம்

செம மழை வெளுத்து வாங்கப் போகுது; அதுவும் இங்கெல்லாம் - உஷார் மக்களே!

நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று நல்ல மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 3 Sep 2020, 6:44 am
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தொடர்ச்சியான மழையை அளித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் சி.எஸ்.பட்டில் கூறுகையில், உத்தர கன்னடா, உடுப்பி, தக்‌ஷின கன்னடா ஆகிய மாவட்டங்களுக்கு செப்டம்பர் 3, 5 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Samayam Tamil Rain in Bangalore


கடலோர கர்நாடகாவில் வரும் 6ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. உத்தர கன்னடாவில் செப்டம்பர் 3, 5 ஆகிய தேதிகளில் கனமழை வெளுத்து வாங்கக்கூடும். உடுப்பி மற்றும் தக்‌ஷின கன்னடாவில் மஞ்சள் எச்சரிக்கை விடப்படுகிறது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு தெற்கு உட்புற கர்நாடகாவில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர கர்நாடகா மற்றும் வடக்கு உட்புற கர்நாடகாவின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

32 ஆண்டுகளில் காணாத தரமான சம்பவம்; வெளுத்து வாங்கிய ஆகஸ்ட் மாதம்!

சிவமோகா, சிக்கமகளூரு, ஹாசன் ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் 10 மாவட்டங்களில் பலத்த இடிக்கு வாய்ப்பிருக்கிறது. இதில் பெரும்பாலும் வடக்குப் பகுதி மாவட்டங்கள் அடங்கும்.

எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று(செப்டம்பர் 3) இடியுடன் கூடிய மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

பெங்களூரு நகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வழிந்தோட போதிய முன்னேற்பாடுகள் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கக்கூடும். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

அடுத்த செய்தி