ஆப்நகரம்

விதியையும் மீறி, போக்குவரத்து காவலரையும் தாக்கிய பெண்!

விதியையும் மீறி, போக்குவரத்து காவலரையும் தாக்கிய பெண்!

TNN 8 Sep 2016, 2:39 am
மும்பை : ஆர்த்தி எனும் பெண் ஹெட்மெட் அணியாமல் வேகமாக ஸ்கூட்டரை ஓட்டிச்சென்றுள்ளார். இதனை கவனித்த போக்குவரத்து காவலர் வண்டியின் எண்ணை குறித்து வைத்துள்ளார். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அவர் சிறிது நேரத்தில் எதிரே வரும் போது, போக்குவரத்து காவலர்கள் தடுத்து நிறுத்தி அபராதம் கட்டச்சொல்லியுள்ளனர். வேகமாக ஓட்டியதற்கும், ஹெல்மெட் அணியாததற்கும் ரூ.500 அபராதம் கேட்டுள்ளனர்.
Samayam Tamil helmetless female rider beat up lady traffic police
விதியையும் மீறி, போக்குவரத்து காவலரையும் தாக்கிய பெண்!


பெண் போக்குவரத்து காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆர்த்தி ஹெட்மெட் அணியாததற்கு 100 ரூபாய் அபராதம் மட்டுமே செலுத்தமுடியும் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் காவலரை மரியாதை குறைவாக பேசியுள்ளார். மரியாதையாக பேசுமாறு ஆர்த்தியிடம் காவல் சொன்னதும், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ஆர்த்தி காவலரை கன்னத்தில் அறைந்து, வயிற்றில் எட்டி உதைத்துள்ளார்.

அதன்பின்னர் ஆர்த்தி அவருடைய சகோதரனை அங்கு வரவழைத்தார். இருவரும் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டியுள்ளனர். கூடுதலான காவலர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பி இருவரையும் கைது செய்தனர்.

அடுத்த செய்தி