ஆப்நகரம்

2016ல் இந்தியர்கள் கூகுளில் என்ன தான் தேடினார்கள் - பட்டியல் இதோ...

2016ம் ஆண்டு முடிய இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில், இந்த ஆண்டில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள், நிகழ்வுகள், பிரபலங்கள் பட்டியல் வரிசைகட்டி வெளிவந்து கொண்டிருக்கிறது.

TNN 15 Dec 2016, 4:10 pm
2016ம் ஆண்டு முடிய இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில், இந்த ஆண்டில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள், நிகழ்வுகள், பிரபலங்கள் பட்டியல் வரிசைகட்டி வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியர்கள் 2016ம் ஆண்டில் கூகுள் தேடுதளத்தில் என்ன நிகழ்வுகள் குறித்து தேடினார்கள், யார் குறித்து தேடினார்கள் என்ற விபரம் வெளியிட்டுள்ளது.
Samayam Tamil heres what india searched on google in 2016
2016ல் இந்தியர்கள் கூகுளில் என்ன தான் தேடினார்கள் - பட்டியல் இதோ...


இந்த ஆண்டு டிரில்லியன் கணக்கில் இந்தியர்கள் தேடியுள்ளனர். அதில் இந்தியாவில் விளையாட்டில் முதலிடத்தில் உள்ள கிரிக்கெட் தொடர்பான நிகழ்வு குறித்தும் அடுத்ததாக ரியோ ஒலிம்பிக் குறித்தும் தேடியுள்ளனர்.

நபர்கள்:
>> அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்தும் அதில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்பையும் தேடியுள்ளனர்.
>> ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பிவி சிந்து ஒட்டுமொத்த டிரெண்டிங் ஆகி முதல் நபராக திகழ்ந்தார்.
>> வியப்பூட்டும் வகையில் சமூக வலைத்தளங்களின் மூலம் சோனம் குப்தா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
>> மற்றொரு ஆச்சரியமாக ஜிம்னாஸ்டிக் வீராங்கனை 3வது இடத்தை பிடித்துள்ளார்.
>> எம் எஸ் தோனி படத்தில் நடித்த திசா படானி 4வது இடம் பிடித்துள்ளார்.
>> ஒலிம்பிக் வெண்கலப்பதக்கம் வென்ற சாக்சி மாலிக் 5வது இடம் பிடித்து அசத்தினார்.
ஒட்டுமொத்தமாக பெண்கள் குறித்து அதிகளவில் தேடப்பட்டுள்ளது.

நிகழ்வுகள்:
முதல் இடம் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட நிகழ்வு ஒலிம்பிக் போட்டிகள். அதற்கடுத்தாற்போல் அமெரிக்க தேர்தலும், அடுத்ததாக ஐரோப்பியன் யூனியன், 7வது ஊதிய கமிஷன், பணம் திரும்பப் பெறப்பட்ட விவகாரம், சர்ஜிகல் ஸ்டிரைக் ஆகியவை முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

திரைப்படங்கள்:
இந்திய திரைப்படங்களை பொருத்தவரை சல்மான் கான் நடித்த சுல்தான் படமும், சூப்பர் ஸ்டார் நடித்த கபாலி படமும் பெரிய போட்டியை சந்தித்தது. அதன் பின் ரன்பிர் கபூர், ஐஸ்வர்யா பச்சன் நடித்த ‘ஏ தில் ஹை முஸ்கில்’ படம் குறித்து அதிகமாக தேடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி