ஆப்நகரம்

ஓட்டுநர் இல்லாமல் 2 கி.மீ ஓடி தடம்புரண்ட ரெயில் எஞ்ஜின்

அரியானாவில் நீராவி எஞ்சின் ஒன்று டிரைவர் இல்லாமலே 2 கிமீ ஓடிச் சென்று தடம் புரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 13 Nov 2017, 6:12 am
v அரியானாவில் நீராவி எஞ்சின் ஒன்று டிரைவர் இல்லாமலே 2 கிமீ ஓடிச் சென்று தடம் புரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil heritage train engine akbar derails in rewari after
ஓட்டுநர் இல்லாமல் 2 கி.மீ ஓடி தடம்புரண்ட ரெயில் எஞ்ஜின்


அரியானா மாநிலத்தில் அக்பர் என்னும் 65 ஆண்டுகள் பழமைவாய்ந்த நீராவி ரெயில் எஞ்சின் ஒன்று உள்ளது. நேற்று அந்த ரெயில் எஞ்சினை பராமரித்து சோதனை செய்யும் பணி நடைபெற்றது.

அப்போது அந்த ரெயில் எஞ்சினின் பிரேக் லிவர் ஓடிக்கொண்டிருக்கும் போது திடீரென்று பழுதடைந்தது. தொடர்ந்து அந்த எஞ்சினில் இருந்த இரண்டு ஓட்டுநர்களும் உயிர் தப்புவதற்காக கீழே குதித்தனர்.

ஓட்டுநர்கள் இல்லாமல் சென்ற அந்த ரெயில் எஞ்சின் தொடர்ந்து 2 கி.மீ தூரம் சென்ற பின்னர் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

அடுத்த செய்தி