ஆப்நகரம்

மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக நடிகை நக்மா நியமனம்!

நடிகை நக்மா , எஸ். விஜயதரணி, ஆகியோர் அகில இந்திய மகளிர் காங்கிரஸின் பொதுச்செயலாளராக நேற்று நியமிக்கப்பட்டனர்.

Samayam Tamil 8 Mar 2018, 12:57 pm
நடிகை நக்மா , எஸ். விஜயதரணி, ஆகியோர் அகில இந்திய மகளிர் காங்கிரஸின் பொதுச்செயலாளராக நேற்று நியமிக்கப்பட்டனர்.
Samayam Tamil heroine nagma nominated as women congress general secretary
மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக நடிகை நக்மா நியமனம்!


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று அகில இந்திய மகளிர் காங்கிரசுக்கு 7 புதிய பொதுச்செயலாளர்களையும், 2 புதிய செயலாளர்களையும் நியமித்து உத்தரவு பிரப்பித்தார்.

அதன்படி அகில இந்திய மகளிர் காங்கிரஸின் பொதுச்செயலாளர்களாக நடிகை நக்மா, எம். எல். ஏ விஜயதரணி. ஷோபனா ஷா, ஜர்ஜம் எடி, நீட் வர்மா சொயின், நேட்டா டிசவுசா, அனுபமா ரவத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செயலாளர்களாக எம் . ஹசீனா சையத், சித்ரா சர்வாரா ஆகியோர், நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தத்தகவலை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி தெரிவித்தார்.

அடுத்த செய்தி