ஆப்நகரம்

ஹைடெக் ஜாக்பாட்: சைபராபாத்தில் ஏலம் விடப்படும் 15 ஏக்கர் ஐ.டி நிலம்

ஐ.டி கம்பெனிகள் அமைந்துள்ள இடங்களுக்கு அருகே உள்ள 15 ஏக்கர் நிலங்களை ஏலம் விட தெலங்கானா மாநில அரசு முடிவு செய்துள்ளது.

TNN 12 May 2017, 1:21 pm
ஐதராபாத்: ஐ.டி கம்பெனிகள் அமைந்துள்ள இடங்களுக்கு அருகே உள்ள 15 ஏக்கர் நிலங்களை ஏலம் விட தெலங்கானா மாநில அரசு முடிவு செய்துள்ளது.
Samayam Tamil hi tech jackpot 15 acres to be auctioned in cyberabad
ஹைடெக் ஜாக்பாட்: சைபராபாத்தில் ஏலம் விடப்படும் 15 ஏக்கர் ஐ.டி நிலம்


தெலுங்கானா மாநில தொழில்துறை உள்கட்டமைப்பு நிர்வாகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஐ.டி நிறுவனங்கள் அமைந்துள்ள முக்கிய இடங்களுக்கு அருகில் உள்ள 15 ஏக்கர் நிலத்தை ஏலம் விட முடிவு செய்துள்ளது. அதற்கான இடங்களை ராய்துர்க் பகுதியில் உள்ள ஹை-டெக் சிட்டி மற்றும் கானாமெட் பகுதிகளில் தேர்வு செய்துள்ளது. இந்த இடங்களை வரும் 18ஆம் தேதி நடைபெறும் ஆன்லைன் ஏலம் மூலம் பெறலாம். மிகவும் பிஸியான பகுதிகளில் உள்ள 15 ஏக்கர் நிலத்தை விற்பதன் மூலம் ரூ.1000 கோடி வருமானம் கிடைக்கும் என்று அம்மாநில தொழில்துறை உள்கட்டமைப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதற்கான உத்தரவை மத்திய அரசின் எம்.எஸ்.டி.சி மாநில அரசிற்கு பிறப்பித்துள்ளது. இந்த விற்பனையில் அதிகபட்சமாக ஒரு சதுர யார்டுக்கு ரூ.80000 மற்றும் குறைந்தபட்சமாக ரூ.60,000ம் நிர்ணயித்துள்ளது. இவை மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கையின்படி, தற்போதைய மார்க்கெட் நிலவரத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக நிறுவனங்கள் ஆரம்பிக்கும் அல்லது கிளை நிறுவனங்களை உருவாக்கும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று கூறப்படுகிறது.

Hi-tech jackpot 15 acres to be auctioned in Cyberabad.

அடுத்த செய்தி