ஆப்நகரம்

இந்துகள் நான்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்.!

'நாடு முழுவதும் ஒரே சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் வரை, இந்துக்கள், குறைந்தது நான்கு குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டும்,'' என, ஹரித்வார் பாரத் மாதா மந்திர் மடாதிபதி, சுவாமி கோவிந்ததேவ் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

TNN 26 Nov 2017, 10:14 am
நாடு முழுவதும் ஒரே சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் வரை, இந்துக்கள், குறைந்தது நான்கு குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டும், என, ஹரித்வார் பாரத் மாதா மந்திர் மடாதிபதி, சுவாமி கோவிந்ததேவ் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil hindus should beget four children till uniform civil code is implemented says senior priest
இந்துகள் நான்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்.!


கர்நாடக மாநிலம் உடுப்பியில் ஆர்.எஸ்.எஸ், விஸ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகளின் சார்பில் இந்துகள் மாநாடு நடந்துவருகிறது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உட்பட பலர் கலந்துகொண்டுள்ள இம்மாநாட்டில் ஹரித்வார் பாரத் மாதா கோயிலைச் சேர்ந்த மடாதிபதி, கோவிந்த தேவ் கிரிஜி மகராஜ் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியாதாவது; நம் நாட்டின் பல பகுதிகளில் இந்துக்களின் மக்கள் தொகை, வேகமாக குறைந்து வருகிறது. இதற்கு முன், இந்துக்களின் மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதிகளை எல்லாம், நாம் எதிரிகளிடம் இழந்துள்ளோம்; இனியும் அந்த நிலை தொடரக் கூடாது.

நாடு முழுவதும் ஒரே சிவில் சட்டம், முழுமையாக அமலாகும்வரை, ஹிந்துக்கள் அனைவரும், குறைந்தது, நான்கு குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு தம்பதிக்கு, இரண்டு குழந்தைகள் என்ற கொள்கை, நாடு முழுவதும் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் பொருந்த வேண்டும்; இதை, இந்துக்கள் மீது மட்டும் திணிக்கக் கூடாது.

பசு பாதுகாவலர்கள் அமைதியை விரும்புவர்கள். ஆனால், குற்றப் பின்னணி உடைய சிலர் இந்த அமைப்பின் பெயரை தவறாக பயன்படுத்தி, குற்றச் செயல்களை செய்கின்றனர். தங்கள் சொந்த பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள பசு பாதுகாவலர்கள் என்ற பெயரை பயன்படுத்துகின்றனர்’

இவ்வாறு ஹரித்வார் பாரத் மாதா மந்திர் மடாதிபதி, சுவாமி கோவிந்ததேவ் கூறினார். இந்துகள் நான்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற இவரது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி