ஆப்நகரம்

அனைவருக்கும் இன்று விடுமுறை; வெளியான ஹேப்பி நியூஸ்!

தொடர் மழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 7 Jan 2021, 9:10 am
கொரோனா அச்சம் காரணமாக பள்ளி, கல்லூரிகளின் கல்வி கற்கும் சூழல் முற்றிலும் மாறிவிட்டது. ஆன்லைன் வாயிலாக பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க ஆலோசனை செய்யப்பட்டு வந்தது. புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரை கடந்த 4ஆம் தேதி அனைத்து வகுப்பினருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பெற்றோர்களின் ஒப்புதல் கடிதத்துடன் வருமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Samayam Tamil Schools Holiday in Puducherry


1,3,5,7ஆம் வகுப்புகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளிலும், 2,4,6,8ஆம் வகுப்புகள் செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளிலும் பள்ளிக்கு வர வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அனைத்து நாட்களிலும் பணிகளில் இருப்பர். வரும் 18ஆம் தேதி முதல் வகுப்பு வழக்கமான பணி நேரங்களில் முழு நேரமும் பள்ளிகள் செயல்படும் என்று புதுச்சேரி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகப் பள்ளிகள் திறப்பும், பெற்றோர் கருத்து கேட்பு கூட்டமும் - வெளியான புதிய தகவல்!

ஆனால் 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை மட்டும் மாணவர்கள் வருகை தந்தனர். கொரோனா பரவல் முழுவதும் நீங்காத நிலையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த சூழலில் புதுச்சேரி மாநிலத்தில் இன்று அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இதையொட்டி வாகனப் போக்குவரத்தும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வருகை புரிந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த சூழலில் தொடர் மழையால் பள்ளிகளுக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அஜித், விஜய்யின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரீ-ரிலீஸ்!
எனவே மாணவர்களின் நலன் கருதி அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (ஜனவரி 7) விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியான அறிவிப்பாக அமைந்துள்ளது.

அடுத்த செய்தி