ஆப்நகரம்

பத்திாிகையாளா் கொலை விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது

பெண் பத்திாிகையாளா் கெளாி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் கா்நாடக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது.

TOI Contributor 6 Sep 2017, 6:55 pm
பெண் பத்திாிகையாளா் கெளாி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் கா்நாடக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது.
Samayam Tamil home ministry asks clarification for the death of gauri lingesh
பத்திாிகையாளா் கொலை விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது


பெங்களூாில் வெளியாகும் லங்கேஷ் பத்திாிகையின் ஆசிாியரான கெளாி லங்கேஷ் இடது சாாி சிந்தனை கொண்டவா். மோடிக்கு எதிரான கருத்துகளை தொடா்ந்து தொிவித்து வந்தாா். கா்நாடகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை அமலாக்க ஆதரவு தொிவித்திருந்தாா். இந்நிலையில் நேற்று மாலை மா்ம நபா்களால் கெளாி லங்கேஷ் சுட்டு கொலை செய்யப்பட்டாா்.

இதனைத் தொடா்ந்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை செயலாளர் ராஜீவ் கௌபாவிடம் இது குறித்து மாநில அரசின் அறிக்கையை கேட்கும்படி கோரியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அரசு கொலை விவகாரத்தில் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பது குறித்தும், கொலையாளிகளை பிடிப்பது குறித்தும் அறிக்கையில் குறிப்பிடும் என்று தெரிகிறது. மாநில அரசு சிறப்பு விசாரணை குழு ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளது.

கௌரி கொல்லப்பட்டதையடுத்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இந்த கொலையை கடுமையாக கண்டித்துள்ளார். விசாரணை விரைந்து நடத்தப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் ஸ்மிருதி வலியுறுத்தியுள்ளாா்.

இதனிடையே எடிடர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா இது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளது.

அடுத்த செய்தி