ஆப்நகரம்

பத்து ரூபாய் நாணயம் தந்ததால் வாடிக்கையாளரை கொலை செய்த ஓட்டல் அதிபர்

பத்து ரூபாய் நாணயம் செல்லுமா செல்லாத என்ற குழப்பத்தில் ஏற்பட்ட தகாரால் தனது வாடிக்கையாளரை ஓட்டல் அதிபர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 5 Nov 2016, 4:00 am
கான்பூர் : பத்து ரூபாய் நாணயம் செல்லுமா செல்லாத என்ற குழப்பத்தில் ஏற்பட்ட தகாரால் தனது வாடிக்கையாளரை ஓட்டல் அதிபர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil hotel owner kills customer over rs 10 coin
பத்து ரூபாய் நாணயம் தந்ததால் வாடிக்கையாளரை கொலை செய்த ஓட்டல் அதிபர்


உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள கான்பூர் சேர்ந்தவர் மகேந்திரா (35) . இவர் கடந்த வெள்ளிக்கிழமை உணவருந்த கிருஷ்ண தபா என்ற ஓட்டலுக்கு சென்றுள்ளார். உணவருந்திவிட்டு அதற்கான பணமான ரூ.160 -ஐ ஓட்டல் உரிமையாளரிடம் வழங்கியுள்ளார்.

மகேந்திரன் வழங்கிய ரூ.160-ல் ஒரு நூறு ரூபாய் நோட்டு , ஒரு ஐம்பது ரூபாய் நோட்டு , ஒரு பத்து ரூபாய் நாணயம் இருந்தது. இவற்றை பெற்றுக் கொண்ட ஓட்டல் அதிபரான பூரான் சிங் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என அதனை மகேந்திரனிடம் திருப்பி அளித்தார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.

இந்த சண்டையின் போது ஆத்திரமடைந்த ஓட்டல் அதிபர் மகேந்திரனை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதில் மகேந்திரன் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து மகேந்திரனின் உறவினர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான ஓட்டல் அதிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி