ஆப்நகரம்

மயானம் முன்பு ''ஹவுஸ் ஃபுல்'' பலகை..! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை...

கர்நாடகாவில் கொரோனா உடல்கள் அதிகமாக கொண்டு வரப்படுவதால் மயானத்துக்கு முன்பு ஹவுஸ் புல் போடப்பட்டுள்ளது.

Samayam Tamil 3 May 2021, 5:25 pm
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றுகளின் வேகம் புயலை காட்டிலும் அசுரத்தனமாக அடித்து வருகிறது. அரசு மருத்துவமனைகள் பல சடலங்களால் நிரம்பியுள்ளன. இதற்கு மத்தியில் மருத்துவர்களும், செவிலியர்களும் பணிச்சுமையை எதிர்கொண்டு வருகிறார்கள்.
Samayam Tamil Covid deaths


இந்த இக்கட்டான சூழலில் அவரவர் பாதுகாப்பு அவரவரிடம் மட்டுமே உள்ளதாக அதிகாரிகள் முதல் அரசியல் தலைவர்கள் வரை எச்சரித்துள்ளனர். வீட்டிலேயே இருக்குமாறும், தவிர்க்கமுடியாத சூழலில் மாஸ்க் அணிந்துகொண்டு வெளியே செல்லவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள இடுகாட்டில் ஹவுஸ் புல் பலகை போடப்பட்டுள்ள சம்பவம் அங்கு ஏற்பட்டு வரும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை விவரிக்கிறது.

கர்நாடகாவின் சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஒரு தகன மைதானத்தில் ஒரே நேரத்தில் 20 கொரோனா நோயாளிகளின் உடல்கள் எரியூட்டப்படுகின்றன. தொடர்ச்சியாக உயிரிழப்புகள் ஏற்படுவதால் அருகில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து எடுத்து செல்லப்படும் உடல்கள் இந்த மயானத்துக்கு கொண்டு வரப்படுகின்றன.

நாடு முழுவதும் முழு ஊரடங்கு போட சொல்லி பரிந்துரை!

ஏற்கனவே 20 உடல்கள் எரிமேடையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில உடல்கள் மையானதுக்கு வெளியே நீண்ட நேரம் காத்துக்கொண்டிருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க மையானதுக்கு வெளியே ''ஹவுஸ் ஃபுல்'' பலகையை மாட்டியுள்ளனர்.

பெங்களூருவில் மொத்தம் 13 மின் தகன மேடைகள் உள்ளன. அவைகள் முழுவதும் கொரோனா நோயாளிகளின் உயிரிழப்புகளால் பரபரப்பாக இயங்குகின்றன. இந்நிலையில், தகனத்தின் சுமையை குறைக்க பெங்களூரைச் சுற்றியுள்ள 230 ஏக்கர்களை கர்நாடக அரசு ''புருஹத் பெங்களூரு மகாநகர பலிகே'' (பிபிஎம்பி) க்கு ஒதுக்கியுள்ளது.

அடுத்த செய்தி