ஆப்நகரம்

வேதங்கள் சாட்சியாக பதவியேற்க வேண்டும்: பாஜக அமைச்சர்

"அமெரிக்க அதிபர் பதவியேற்கும்போது பைபிளை சாட்சியாக வைத்து பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்படுகிறார். அது போல இந்தியாவில் குடியரசுத் தலைவர் வேதப்புத்தகத்தை ஒரு கையில் சாட்சியாகக்கொண்டு பதவியேற்க வேண்டும் என நான் கனவு காண்கிறேன்."

Samayam Tamil 26 Oct 2018, 5:43 pm
இந்தியாவில் ஜனாதிபதி வேதத்தை சாட்சியாக வைத்து பதவியேற்கும் நிலையை தான் கனவு காண்பதாக மத்திய அமைச்சர் சத்ய பால் சிங் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Satyapal_Singh_PTI


ஆரிய சமாஜத்தின் நான்கு நாள் சர்வதேச மாநாட்டில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சத்ய பால் சிங் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "இது ஆரிய சமாஜத்தின் மஹாகும்பம் போன்றது" என்றார்.

தொடர்ந்து, "அமெரிக்க அதிபர் பதவியேற்கும்போது பைபிளை சாட்சியாக வைத்து பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்படுகிறார். அது போல இந்தியாவில் குடியரசுத் தலைவர் வேதப்புத்தகத்தை ஒரு கையில் சாட்சியாகக்கொண்டு பதவியேற்க வேண்டும் என நான் கனவு காண்கிறேன்." என்று குறிப்பிட்டார்.

ரிஷிகளின் போதனைகளே தற்போதய தேசத்தின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும் என்றும் கூறிய அவர், “இழந்த பெருமை”யை இந்தியா மீட்டெடுக்க வேண்டும் எனவும் வலியறுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி ஒரு முறை, “இந்திய அரசியலமைப்புச் சட்டமே தனது எனது புனித நூல்.” என்று பேசியிருப்பதும், அமைச்சர் சத்ய பால் இந்துக்களின் புதின நூலாகக் கருதப்படும் வேதங்களை வைத்து பதவியேற்க வேண்டும் எனப் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

அடுத்த செய்தி