ஆப்நகரம்

'சாதிய விமர்சனத்தால் பலமுறை தற்கொலைக்கும் முயன்றேன்’ - தலித் ஜீயரின் சோகக் கதை!

சாதி குறித்த விமர்சனங்களால், தற்கொலை எண்ணத்திற்கும் சென்றதாக தலித் ஜீயர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 30 Apr 2018, 4:03 pm
அலகாபாத்: சாதி குறித்த விமர்சனங்களால், தற்கொலை எண்ணத்திற்கும் சென்றதாக தலித் ஜீயர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Dalit Seer
கண்ணையா பிரபு


ஜூன் அகாராவின் முதல் தலித் மகா மண்டலேஸ்வரர் என்ற பெருமையை பெற்ற கண்ணையா பிரபு, தனது வாழ்வில் ஏற்பட்ட சாதிய விமர்சனங்கள் குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

கண்ணையா குமார் காஷ்யப் என்ற இயற்பெயர் கொண்ட கண்ணையா பிரபு, 7 வயதில் கூலித் தொழிலாளியாக மாறினார். காய்கறி விற்ற தனது தந்தையின் வருமானம் குடும்பத்தினருக்கு போதவில்லை.

இதையடுத்து தனது வாழ்வில் அனுபவித்த மோசமான அனுபவங்களால் ஜோதிடத்தின் பக்கம் திரும்பினார். தன் விதி என்னவென்று அறிந்து கொள்ள முற்பட்டார். பின்னர் பக்தி மயத்தால் ஆன்மீக வழி சென்றார்.

டீன் ஏஜில் கையில் கிடைக்கும் அனைத்து ஆன்மீக நூல்களையும் படித்து முடித்து விடுவார். கடந்த 2008ல் சண்டிகரின் ஜோதிஷ் விஞ்ஞான் பரிஷத்தில் சேர்ந்து ஜோதிடவியலில் பட்டம் பயின்றார்.

2013ல் பெற்ற ஜோதிடவியல் முதுகலைப் பட்டம், வாழ்வையே மாற்றிவிட்டது. தலித் என்பதால் வேத சமஸ்கிருதம் பயில அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அவருக்கு உறுதுணையாக குரு ஜகத்குரு பஞ்ச்நங்கிரி இருந்துள்ளார்.

இதனால் சமஸ்கிருதம் கற்றுத் தேறினார். தன் வாழ்வில் அனைத்து சூழல்களிலும் சாதிய ரீதியிலான விமர்சனங்களால் தாக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக பலமுறை தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.

அஸாம்காரில் உள்ள ஆசிரமத்தில் வசித்து வரும் அவர், சாதி ரீதியான தாக்குதல்களை தவிர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். லால்கஞ்ச் டெஹ்சில்லில் பள்ளி ஒன்றை தொடங்கி, இலவச கல்வி வழங்கி வருகிறார்.

I felt like ending life due to caste humiliation says Dalit seer.

அடுத்த செய்தி