ஆப்நகரம்

Domestic flights: டெல்லி டூ புனே... “நான் கொஞ்சம் பயந்தேன்” - பயணியின் பதில்

விமானச் சேவையின் போது முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் பலமாகச் செய்யப்பட்டிருப்பதாக விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் தெரிவிக்கிறார்.

Samayam Tamil 25 May 2020, 8:43 am
61 நாட்களாக விமான சேவை ரத்தாகியிருந்த நிலையில் இன்று முதல் உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து இன்று காலை விமானங்கள் புறப்பட்டுச் சென்றன.
Samayam Tamil புனே விமான நிலையத்தில் பயணி


டெல்லி ஐ.ஜி.ஐ. விமான நிலையம், மும்பை சிவாஜி விமான நிலையம், சென்னை உள்நாட்டு விமான நிலையம் உள்ளிட்ட விமான நிலையங்களிலிருந்து இயக்கப்படும் உள்நாட்டு விமான சேவையைப் பயன்படுத்தி சொந்த மாவட்டங்களுக்குச் சென்றனர்.

இன்று மட்டும் சென்னை விமான நிலையத்தில் இருந்து மட்டும் சுமார் 70க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான விமானங்கள் அனைத்து விமான நிலய்யங்களிலிருந்துமே இயக்கப்படுகின்றன. குறைவான இருக்கைகளே பயன்படுத்தப்படுவதால் அதிகமான விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை கடைபிடிக்க வேண்டியும் உள்ளதால் அதற்கேற்ப விமானங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இயக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.



அந்த வகையில் டெல்லியிலிருந்து இன்று காலை டெல்லியிலிருந்து கிளம்பிய புனே விமானம் பத்திரமாக புனே சென்று சேர்ந்தது. இந்தப் பயணம் குறித்துப் பயணி ஒருவர் பேசியபோது, “ நான் இந்தப் பயணத்தை எண்ணி கொஞ்சம் பயந்திருந்தேன். ஆனால், அனைத்துப் பயணிகளும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன்தான் வந்திருந்தனர். தற்போது மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே பயணிகள் வருகின்றனர் ” என்று தெரிவித்தார்.

61 நாட்களுக்குப் பிறகு விமானச் சேவைகள் மீண்டும் துவங்கியிருக்கும் நிலையில், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாவது நம்பிக்கை அளிக்கும் விதத்தில் உள்ளது.

அடுத்த செய்தி