ஆப்நகரம்

“சிறை அதிகாரிகள் என்னை அடித்தனர், பாலியல் அச்சுறுத்தல் செய்தனர்” : இந்திராணி முகர்ஜி புகார்!

சிறை அதிகாரிகள் தன்னை அடித்ததாகவும், பாலியல் வன்கொடுமை செய்யும் ரீதியில் அச்சுறுத்தியதாகவும் ஷீனா போரா கொலை வழக்கில் மும்பை சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி புகார் அளித்துள்ளார்.

TOI Contributor 28 Jun 2017, 4:39 pm
சிறை அதிகாரிகள் தன்னை அடித்ததாகவும், பாலியல் வன்கொடுமை செய்யும் ரீதியில் அச்சுறுத்தியதாகவும் ஷீனா போரா கொலை வழக்கில் மும்பை சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி புகார் அளித்துள்ளார்.
Samayam Tamil i was beaten and threatened with sexual assault indrani tells court
“சிறை அதிகாரிகள் என்னை அடித்தனர், பாலியல் அச்சுறுத்தல் செய்தனர்” : இந்திராணி முகர்ஜி புகார்!

2012ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி இந்திராணி முகர்ஜியின் மகள் ஷீனா போரா கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு சிபிஐக்கு மாறிய பின்னர் இந்த கொலையை செய்தது இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி என தெரியவந்தது. இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு இந்திராணி முகர்ஜி கைது செய்யப்பட்டார்.

இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் பீட்டர் முகர்ஜி, இரண்டாவது கணவர் சஞ்சய் கன்னா கைது செய்யப்பட்டனர். கார் ஓட்டுநர் ஷியாம்வர் ராய் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து இந்திராணி முகர்ஜி மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பைகுல்லா சிறையில் சமீபத்தில் பெண் கைது ஒருவர் இறந்துள்ளார். சிறை அதிகாரிகள் தாக்கியதால் தான் பெண் கைதி இறந்தார் என்று பெண் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம் கலகமாக மாறியது, இந்த கலகத்தில் இந்திராணி முகர்ஜிக்கு பெரும் பங்கு இருந்ததாக சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் சிறை அதிகாரிகள் தன்னை அடித்ததாகவும், பாலியல் அச்சுறுத்தல் செய்ததாகவும் இந்திராணி முகர்ஜி தன் வழக்கறிஞர் மூலம் சிபிஐ நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

அடுத்த செய்தி