ஆப்நகரம்

நானும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன்: பாஜக எம்.பி. பூனம் மஹாஜன்

அகமதாபாத்தில் இருக்கும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பாஜக எம்.பி பூனம் மஹாஜன் தானும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறினார்.

TNN 2 Oct 2017, 4:14 pm
அகமதாபாத்: அகமதாபாத்தில் இருக்கும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பாஜக எம்.பி பூனம் மஹாஜன் தானும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறினார்.
Samayam Tamil i was sexually harassed too bjp mp poonam mahajan
நானும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன்: பாஜக எம்.பி. பூனம் மஹாஜன்


இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்-அகமதாபாத்தில் (IIM-A) நடைபெற்ற ரெட் பிரிக்ஸ் சம்மிட்டில் பாஜகவின் மும்பை வடக்குத் தொகுதி எம்.பி பூனம் மகாஜன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர்,”இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான பெண்களைப் போன்று, நானும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டேன். நான் படிக்கும் காலங்களில் வோர்லியிலிருந்து வர்சோவாவிற்கு ரயிலில் செல்வது வழக்கம். அப்போது சிலர் என்னைத் தகாத முறையில் பார்ப்பார்கள். அதைப் பற்றி நான் கவலைக் கொள்ளவில்லை.

பெண்கள் பாலியல் ரீதியான கொடுமைகளை நினைத்து வருத்தப்படக் கூடாது. அதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அறையுங்கள்,” என்று கூறியுள்ளார். பூனம் மஹாஜன் பாஜகவின் முன்னாள் தலைவர் பிரமோத் மஹாஜனின் மகள் ஆவார்.

I was sexually harassed too: BJP MP Poonam Mahajan.

அடுத்த செய்தி