ஆப்நகரம்

சிறப்பு அந்தஸ்து குறித்து மோடியிடம் தொடர்ந்து வலியுறுத்துவேன்- ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவது பற்றி பிரதமர் மோடியிடம் தொடர்ந்து வலியுறுத்துவேன் என ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். சிறப்பு மாநில அந்தஸ்து கிடைத்தால் 90 சதவீதம் நிதியை மத்திய அரசு வழங்கிவிடும். இதற்காகத்தான் இந்த கோரிக்கையை ஆந்திர அரசு முன்வைத்தது.

Samayam Tamil 26 May 2019, 5:12 pm
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவது பற்றி பிரதமர் மோடியிடம் தொடர்ந்து வலியுறுத்துவேன் என ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil jagan mohan reddy


ஆந்திரா மாநிலம் ஆந்திரா, தெலுங்கானா என இரு மாநிலங்களாக பிரிக்கப்பட்டதையடுத்து ஆந்திராவின் தலைநகரம் விஜயவாடா அருகே உள்ள அமராவதியில் அமைக்கப்படுகிறது.

புதிய மாநிலம் என்பதால் தலைநகரம் அமைப்பதற்கும் மற்றும் பல்வேறு திட்டங்களுக்கும் அதிக நிதி தேவைப்படுகிறது. எனவே மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஆளும் தெலுங்கு தேசம் கட்சி வேண்டுகோள் விடுத்து வந்தது.

மேலும், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது. சிறப்பு மாநில அந்தஸ்து கிடைத்தால் 90 சதவீதம் நிதியை மத்திய அரசு வழங்கிவிடும். இதற்காகத்தான் இந்த கோரிக்கையை ஆந்திர அரசு முன்வைத்தது.

ஆனால் உரிய நிதி உதவியும் மத்திய அரசு செய்யவில்லை. சிறப்பு மாநில அந்தஸ்தும் வழங்கவில்லை. இதனால் கோபம் அடைந்த முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகுவது பற்றி ஆலோசிப்பதாக தெரிவித்தார்.

இதனால் பா.ஜனதா - தெலுங்குதேசம் உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் பாராளுமன்ற கூட்டம் நடந்தபோது தெலுங்குதேசம் எம்.பி.க்கள் இந்த பிரச்சினையை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து மத்திய மந்திரி அருண்ஜெட்லி, தெலுங்குதேசம் தலைவர்களை அழைத்து பேசினார். இதில் பா.ஜனதா முன்னணி தலைவர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது, பா.ஜனதா தலைவர்களுக்கும், தெலுங்குதேசம் தலைவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. ஆந்திராவுக்கு எந்த உதவியும் சரியாக செய்யவில்லை. உடனடியாக ரூ.16 ஆயிரம் கோடி தர வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினார்கள்.

அமராவதி தலைநகரம் திட்டம் மற்றும் போலாவரம் திட்டத்திற்கு அதிக நிதி தேவைப்படுகிறது. இதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

ஆனால் பல்வேறு காரணங்களை முன்வைத்து நிதி ஒதுக்குவதில் உள்ள சிக்கல் குறித்து பா.ஜனதா தரப்பில் விளக்கினார்கள். அதை தெலுங்குதேசம் கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதற்கிடையே ஆந்திராவுக்கான சிறப்பு மாநில அந்தஸ்து வழங்குவதற்கு வாய்ப்பே இல்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அப்படி சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான காரணங்கள் ஆந்திராவில் இல்லை. எனவே வழங்க முடியாது என்றும் கூறியிருக்கிறார்கள்.

ஒரு மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்றால் பல்வேறு குழுக்கள் அதற்கான காரணங்களை காட்டி விளக்க வேண்டும். அப்படி செய்தால் தான் சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க முடியும். அதற்கான வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.

கூடுதல் நிதி உதவிக்கோ, சிறப்பு மாநில அந்தஸ்துக்கோ உதவ மத்திய அரசு முன்வராததால் பா.ஜனதா-தெலுங்குதேசம் உறவில் விரிசல் அதிகரித்தது. இருந்தாலும் அருண்ஜெட்லி பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சற்று அமைதி ஏற்பட்டது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவது பற்றி பிரதமர் மோடியிடம் தொடர்ந்து வலியுறுத்துவேன் என ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி