ஆப்நகரம்

சீன எல்லை: 16,000 அடி உயரத்தில் ஹெலிகாப்டர்: அலர்ட்டான இந்தியா!

இந்திய விமானப் படையின் சினூக் ரக ஹெலிகாப்டர்கள் எல்லைப் பகுதியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Samayam Tamil 9 Aug 2020, 2:51 pm

இந்தியா, சீனா இடையே கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. பிரச்சினையை தீர்க்க அவ்வப்போது இருதரப்பு ராணுவ அதிகாரிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இவ்வகையில் நேற்று (ஆகஸ்ட் 9) இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
Samayam Tamil சினூக் ஹெலிகாப்டர்


இந்நிலையில், எல்லைப் பகுதியில் சீனா தனது ராணுவத்தை குவித்து வருவதாகவும், சாலைக் கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்திய விமானப் படை தனது சினூக் ரக ஹெலிகாப்டர்களை எல்லைப் பகுதியில் பறக்கவிட்டுள்ளது.

எல்லைப் பிரச்சினை: இந்தியா - சீனா இன்று பேச்சுவார்த்தை!

கரகோரம் கணவாய் அருகேயுள்ள தவுலத் பெக் ஒல்டி பகுதியில் நேற்று இரவு சுமார் 16,000 அடி உயரத்தில் இந்திய விமானப் படையின் சினூக் ஹெலிகாப்டர்கள் பறந்துள்ளன. உடனடி தேவை ஏற்படும்போது அப்பகுதியில் ராணுவப் படையையும், ஆயுதங்களையும் உடனடியாக கொண்டுவருவதற்கான சோதனையாக இந்த ஹெலிகாப்டர்கள் பறக்கவிடப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

சுஷுல் பகுதியில் அப்பாச்சே ரக ஹெலிகாப்டர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், தவுலத் பெக் ஒல்டி பகுதியில் சினூக் ஹெலிகாப்டர்களின் இரவுப் போர்த் திறன் நேற்று பரிசோதிக்கப்பட்டதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.

இதுபோக, தவுலத் பெக் ஒல்டி பகுதியில் டி-90 ரக பீரங்கிகள், சிறிய ரக பீரங்கிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சினூக் ரக ஹெலிகாப்டர்கள் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படுபவை. இவை, ஆப்கானிஸ்தானின் மிக உயர மலைப்பகுதிகளிலும் திறம்பட செயல்பட்டதற்காக பெயர் பெற்றவை.

அடுத்த செய்தி