ஆப்நகரம்

ஐ.நா. உயர் பதவியில் தமிழ்ப்பெண்!

ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார நிறுவனத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த சௌம்யா சுவாமிநாதன் துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

TNN 4 Oct 2017, 2:28 am
ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார நிறுவனத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த சௌம்யா சுவாமிநாதன் துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil icmr chief soumya swaminathan appointed who deputy dg
ஐ.நா. உயர் பதவியில் தமிழ்ப்பெண்!


இந்திய மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் தலைவராக உள்ள சௌம்யா சாமிநாதன் பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மகள் ஆவார்.

உலக சுகாதார நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டைச் சேர்ந்த ஒருவரை சபையின் உலக சுகாதார நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்தன. இதில், இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட சௌம்யா சுவாமிநாதன் இப்பதவியைப் பெற்றுள்ளார்.

58 வயதான சௌம்யா குழந்தைகள் நல மருத்தவர் ஆவார். மேலும், காச நோய்க்கான சிகிச்சையில் இவர் மிகவும் புகழ்பெற்றவர்.

அடுத்த செய்தி