ஆப்நகரம்

இது குறைந்தால் கொரோனா பாதிக்கும்: ICMR அதிர்ச்சி தகவல்!

உடலில் ஐந்து மாதங்களுக்குள் ஆண்டிபாடிக்கள் குறைந்தால் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 20 Oct 2020, 8:19 pm

இந்தியாவில் இதுவரை 76 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 67.3 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil Immunity


இந்நிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர்களுக்கு ஐந்து மாதத்திற்குள் ஆண்டிபாடிக்கள் குறைந்தால் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐசிஎம்ஆர் பொது இயக்குநர் டாக்டர் பல்ராம் பார்கவா செய்தியாளர்களிடம் பேசியபோது, “கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பிறகு உடலில் ஆண்டிபாடிக்கள் உருஆகும். கொரோனாவை பொறுத்தவரை உடலில் ஐந்து மாதங்களுக்கு ஆண்டிபாடிக்கள் இருக்குமென தெரிகிறது.

வலதுபக்கத்தில் இதயம்: மருத்துவர்களையே அதிரவைத்த அதிசய பெண்!

கொரோனாவை பற்றி இன்னும் ஆய்வுகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. எனவே, கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு ஐந்து மாதங்களுக்குள் ஆண்டிபாடிக்கள் குறைந்தால் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

எனவே, ஒரு முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், மாஸ்க் அணிவது போன்ற பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். காய்ச்சல், சளி, மூச்சுவிடுவதில் சிரமம் ஆகியவை கொரோனாவுக்கான முக்கிய அறிகுறிகள்.

உலக சுகாதார மையத்தின் 30 நாள் சோதனையில் இந்தியாவும் பங்கெடுத்துள்ளது. இதன் இடைக்கால முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. எனினும், ரெம்டெசிவிர், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் போன்ற மருந்துகள் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை” என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி