ஆப்நகரம்

இட்லி, தோசை தான் டாப்பு: வெங்கையா ருசிகர பேச்சு

வெளிநாட்டு உணவுகளைக் காட்டிலும் நமது இட்லி, தோசை, சாம்பார்தான் பெரியது என துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியிருக்கிறார்.

Samayam Tamil 29 Sep 2018, 4:43 pm
பீசா, பர்கர் மாதிரியான வெளிநாட்டு உணவுகளைக் காட்டிலும் நமது இட்லி, தோசை, சாம்பார்தான் பெரியது என துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியிருக்கிறார்.
Samayam Tamil More-Naidu_d


கோவாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற என்ஐடி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

பட்டங்களை வழங்கிப் பேசிய நாயுடு, “பீசா, பர்கர் மாதிரியான வெளிநாட்டு உணவுகளைக் காட்டிலும் நமது இட்லி, தோசை, சாம்பார்தான் பெரியது. கோவா மீன் குழம்பின் சுவை நம்மை அடிமை ஆக்கிவிடும். இந்த உணவுகள் சர்வதேச அளவில் பேசப்படுகின்றன.” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து, “உலகிலேயே மிகப் பழமையான நாகரிகங்களில் இந்திய நாகரிகமும் ஒன்று. தற்போது நம் நாகரிகம்தான் உயிர்ப்புடன் உள்ளது.” என்று பெரிமிதம் தெரிவித்தார்.

மேலும், “ரோம், எகிப்து, கிரேக்கம் என பல நாகரிகங்கள் இருந்துள்ளன; அவற்றின் தற்போதைய நிலை என்ன? இந்திய நாகரிகத்தின் நிலை என்ன?” எனவும் வெங்கையா நாயுடு கேள்வி எழுப்பினார்.

“இந்தியா வலுவான நாடாக உள்ளது. பல மாற்றங்களைக் கண்டுவருகிறது. ஏனென்றால் இந்தியா, ‘வசுதேவ குடும்பகம்’ (உலகம் முழுவதும் ஒரே குடும்பம்) என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கிறது” எனவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி