ஆப்நகரம்

ஜெட்லிக்கு பதவி கொடுத்த சின்ஹா!

நான் நிதி அமைச்சர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தால் அருண் ஜெட்லி தற்போது இருக்கும் இடத்தில் இருக்க மாட்டார் என்று முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.

TNN 30 Sep 2017, 3:23 am
நான் நிதி அமைச்சர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தால் அருண் ஜெட்லி தற்போது இருக்கும் இடத்தில் இருக்க மாட்டார் என்று முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.
Samayam Tamil if i wanted finance ministry jaitley wouldnt have been there yashwant sinha
ஜெட்லிக்கு பதவி கொடுத்த சின்ஹா!


பிரதமர் நரேந்திர மோடியும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் இந்தியப் பொருளாதாரத்தை சிதைத்து விட்டார்கள் என்று பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா ஒரு நாளிதழில் எழுதிய கட்டுரை ஒன்றில் கூறியிருந்தார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த சின்ஹா ஆளும் பாஜக அரசை இவ்வாறு விமர்சித்தது சர்ச்சையைக் கிளப்பியது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சின்ஹாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இதனிடையே, சின்ஹாவின் குற்றச்சாட்டு பற்றி பேசிய அருண் ஜெட்லி, "சின்ஹா 80 வயதில் வேலை கேட்டு விண்ணப்பிக்கிறார். அவர் நிதி அமைச்சராக இருந்தபோது 15 சதவீத வாராக்கடன் இருந்தது. அந்த சாதனையை அவர் மறந்துவிட்டார். தனிமனிதர்களை விமர்சிக்க தொடங்கிவிட்டார். ப.சிதம்பரத்துடன் இணைந்து செயல்படுகிறார்." என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ஜெட்லியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய யஷ்வந்த் சின்ஹா, நான் நிதி அமைச்சர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தால் தற்போது இருக்கும் இடத்தில் அவர் இருந்திருக்க மாட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி