ஆப்நகரம்

ராகுல் பிராமணன் என்றால் இதைச் செய்யவாரா? உமா பாரதி கேள்வி

தன்னை பிராமணன் என்று கூறிக்கொள்ளும் ராகுல் காந்தி அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஆதரவு தெரிவிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் உமா பாரதி வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 8 Dec 2018, 7:04 pm
அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்துக்காகச் சென்ற காங்கிரஸ் தலைவர ராகுல் காந்தி புஸ்கர் பிரம்மா கோவிலுக்குச் சென்றார். பூஜையின்போது கோயில் பூசாரியிடம் தனது கோத்திரம் தத்தாத்ரேய கோத்திரம் என்றும் தான் கவுல் பிராமணன் என்றும் கூறியுள்ளார்.
Samayam Tamil DtzPdOMU8AAR64S


ஏற்கெனவே பல இந்துக் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனை நடத்துவதை வழக்கமாகக் கொண்ட ராகுல், தன்னை பிராமணன் என்று கூறிக்கொண்டதற்காக விமர்சனங்களைச் சந்தித்துள்ளார்.

இந்நிலையில், தன்னை பிராமணன் என்று சொன்ன ராகுல் காந்தி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.
"அவர் கைலாசத்துக்கும் மானசரோவருக்கும் யாத்திரை செல்கிறார், அவரது கட்சி அவரை சிவ பக்தர் என்று சொல்கிறது" எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சர் உமா பாரதி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். அதற்குக் காரணம், ராமர் கோயில் கட்டவும் கங்கையை சுத்தம் செய்யவும் முழு கவனம் செலுத்தப்போவதுதான் எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி