ஆப்நகரம்

சல்மான் கான் பாகிஸ்தானுக்கு சென்று விட வேண்டும்: சிவ சேனா

பாகிஸ்தான் நடிகர்களுக்கு ஆதரவாக செயல்படும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு பாடம் கற்பிக்க வேண்டிய தேவையுள்ளது என்று சிவ சேனா தலைவர் மனீஷா கயண்டே கூறியுள்ளார்.

TNN 1 Oct 2016, 4:58 pm
பாகிஸ்தான் நடிகர்களுக்கு ஆதரவாக செயல்படும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு பாடம் கற்பிக்க வேண்டிய தேவையுள்ளது என்று சிவ சேனா தலைவர் மனீஷா கயண்டே கூறியுள்ளார்.
Samayam Tamil if salman khan loves pakistani actors he should migrate there shiv sena
சல்மான் கான் பாகிஸ்தானுக்கு சென்று விட வேண்டும்: சிவ சேனா


அவருக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஒவ்வொரு வருடமும் பல வீரர்கள் உயிரிழந்து வரும் போது கூட இந்தியா – பாகிஸ்தான் இடையே தொடர்ந்து போர் இருந்துவருகிறது என்று சல்மான் கான் குறிப்பிட்டு கூறியதாக கயண்டே தெரிவித்துள்ளார்.

மேலும், பாகிஸ்தான் மீதும் அந்நாட்டு நடிகர் மீதும் அக்கறை கொண்ட சல்மான் கான் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்து செல்வார் என்று நான் நினைக்கிறேன். நான் நினைக்கிறேன், இப்போது இல்லைன்னாலும், எப்போதாவது சல்மான் கான் பாடம் கற்றுக்கொள்வார் என்று நினைக்கிறேன் என்று கயண்டே கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக நேற்று பாகிஸ்தான் நடிகர்கள் தீவிரவாதிகள் அல்ல. அவர்கள் படங்களுக்கு தடை விதிக்க முடியாது என்றும், அந்நாட்டு மக்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்தார் என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி