ஆப்நகரம்

வாக்கு செலுத்தவில்லை என்றால் வருத்தப்பட வேண்டும்- மோடி

நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு செலுத்தவில்லை என்றால் இளைஞர்கள் வருத்தப்பட வேண்டும் என மோடி கூறியுள்ளார். மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 27 Jan 2019, 4:52 pm
நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு செலுத்தவில்லை என்றால் இளைஞர்கள் வருத்தப்பட வேண்டும் என மோடி கூறியுள்ளார். மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil modi pm


மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சியில் பிரதமர் மக்களுடன் உரையாற்றுவார்.
இது பல மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டு வருகிறது. சமீப நிகழ்ச்சியில் தேர்தல் கமிஷன் குறித்து பேசினார் மோடி. அப்போது 21ம் நூற்றாண்டில் பிறந்தவர்கள் (2001ல் பிறந்தவர்கள்) தற்போது வாக்களிக்கும் வயது அடைந்துள்ளீர்கள். இந்த இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடவேண்டும். நீங்கள் கட்டாயம் உங்கள் ஓட்டுரிமையை பயன்படுத்தி வாக்களிக்க வேண்டும்.

வாக்களிப்பது ஓவ்வொரு இந்திய குடிமகனின் ஜனநாயக கடமை. வாக்களிக்காவிட்டால் அதனை நினைத்து தாங்கள் வருத்தப்பட வேண்டும். வரும் ஜன., 30ம் தேதி மகாத்மா காந்தியின் மறைவு நாள். அவருக்கு நாம் அனைவரும் அஞ்சலி செலுத்த வேண்டும். 1950ம் ஆண்டு ஜன., 25 அன்று இந்திய தேர்தல் கமிஷன் உருவாகி தேர்தலை நடத்தி வருகிறது. ஜனநாயகத்தை வலுப்படுத்தியதில் முக்கிய பங்கு வகிப்பது எலெக்‌ஷன் கமிஷன். அதன் செயல்களை பாராட்டி ஆக வேண்டும் என்றார்.

நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உதவும் அனைத்து தேர்தல் கமிஷன் அதிகாரிகள், ஊழியர்கள், பணியாளர்களுக்கு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நகர்புறம் மட்டுமல்லாம் கிராமப்புற இளைஞர்களும், பெண்களும், முதியவர்களும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகின்றனர் என்றார்.

அடுத்த செய்தி