ஆப்நகரம்

விவசாயியை திருமணம் செய்தால் ஒரு லட்சம் பரிசு!

கர்நாடக மாநிலத்தில் படித்து ஐடி, மத்திய அரசு வேலையில் இருப்பவர்களை மணக்கவே பலர் விரும்புகின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு பெண் கொடுக்க ஒரு திட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதன்படி பதிவு செய்த விவசாயிகளை மணக்கும் பெண்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 30 Jan 2019, 10:35 am
ஏப்., 1, 2019 முதல் தொடங்கவுள்ள இந்த 'அதிர்ஷ்ட திருமணம்’ திட்டத்தின்கீழ் விவசாயியைத் திருமணம் செய்யும் எல்லா பெண்களுக்கும் அவர்களது வங்கி கணக்கில் 1 லட்சம் ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்படும். ஆனால் அந்த விவசாயி அனகொடு சேவா சகாக்கரி சங்கத்தில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே இந்தப் பணம் கிடைக்கும்.
Samayam Tamil money


சமூக ரீதியாக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள வாழ்க்கைத் துணையைத் தேடுவதில் சிக்கல் உள்ள விவசாயிகள் இந்தத் திட்டம் கீழ் பயன்பெறுவார்கள்.
உத்தர கர்நாடகாவில் உள்ள பல இளம் பெண்கள் பெங்களூருவில் ஐ.டி., வேலையில் அதிகச் சம்பளம் வாங்குபவர்கள் அல்லது அரசு உத்தியோகத்தில் உள்ளவர்களைத் திருமணம் செய்யவே விரும்புகின்றனர். எனவே விவசாயக் குடும்பத்தில் தற்போதும் தொடர்ந்து விவசாயம் செய்துவரும் ஆண்களுக்குப் பெண் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதைத் தடுக்கவே இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். மேலும் இந்தத் திட்டம் கீழ் பணம் பெற வேண்டுமெனில் அனகொடு சேவா சகாக்கரி சங்கத்தில் உறுப்பினராக இருப்பது மட்டும் இல்லாமல் ஆண்டுக்கு 3 லட்சத்திற்கும் குறையாமல் பரிவர்த்தனை செய்ய வேண்டும். அனகொடு கிராமத்தில் உள்ள 300 வீடுகளில் பெரும்பாலானவர்கள் இந்தச் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளார்கள்” என்று அனகொடு சேவா சகாக்கரி சங்கத்தின் தலைவர் என் கே பட் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி