ஆப்நகரம்

100 ரூபாயில் கொரோனா பாதுகாப்பு கிட்...அசத்திய ஐஐடி குழுவினர்!

ரூ.100க்கும் குறைவான செலவில் பெறக்கூடிய கொரோனா பாதுகாப்பு கிட்டை கான்பூர் ஐஐடி குழுவினர் வடிவமைத்துள்ளனர்.

Samayam Tamil 10 Apr 2020, 2:51 pm
கொரோனா வைரஸ் கொள்ளை நோயை தடுப்பதற்காக நாடு தழுவிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கையுறை, முகக்கவசம், ஹேண்ட் சானடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
Samayam Tamil 100 ரூபாயில் கொரோனா பாதுகாப்பு கிட் அசத்திய ஐஐடி குழுவினர்


நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குறைந்த விலையில் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக கான்பூர் ஐஐடி (இந்திய தொழில்நுட்ப கழகம்) புதிய கிட்டை வடிவமைத்துள்ளது. ஏற்கெனவே ஊழியர்களுக்கு வழங்கப்படும் கிட்களை போலவே இதுவும் பாதுகாப்பானது என்று இதை வடிவமைத்த குழு உறுதியளித்துள்ளது.

இந்த கிட்டிற்கு PIPES (Polyethylene based Improvised Protective Equipment under Scarcity) என்று பெயரிடப்பட்டுள்ளது. பெருமளவில் உற்பத்தி செய்தால் ஒரு கிட்டை ரூ.100க்கும் குறைவான விலையில் வழங்க முடியும் என்று குழுவினர் தெரிவித்துள்ளனர். மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பிற்காக பிரத்யேகமாக இந்த கிட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவிற்கு தலைமை வகித்த பேராசிரியர் நிதின் குப்தா பேசுகையில், “கோவிட்-19 கொள்ளை நோய் பரவலின் விளைவாக தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களுக்கான தேவை வெகுவாக உயர்ந்துள்ளது. இப்போது பயன்படுத்தப்பட்டு வரும் கிட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் குறைந்த விலையில் நிறைய மாற்று உபகரணங்களை உற்பத்தி செய்யவேண்டிய அவசியம் உண்டாகியுள்ளது.

நாங்கள் வடிவமைத்துள்ள கிட்டை எந்தவொரு சிறு, குறு ஆலையாலும் உற்பத்தி செய்துவிட முடியும். பெருமளவில் உற்பத்தி செய்தால் ஒரு கிட்டை ரூ.100க்கும் குறைவான விலையில் வழங்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி