ஆப்நகரம்

ஐஐடியில் மாணவிகளுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு

ஐஐடியில் மாணவிகளின் சேர்க்கை குறைவதைக் கருத்தில் கொண்டு மாணவிகளுக்கான இட ஒதுக்கீடு மேலும் 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

TNN 15 Apr 2017, 8:15 pm
ஐஐடியில் மாணவிகளின் சேர்க்கை குறைவதைக் கருத்தில் கொண்டு மாணவிகளுக்கான இட ஒதுக்கீடு மேலும் 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
Samayam Tamil iit reservation for girls extended by 20 percent due to lack of admission
ஐஐடியில் மாணவிகளுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு


ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் மாணவிகளின் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு, மாணவர் சேர்க்கையின் போது மாணவிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பதாக, ஐஐடி மாணவர் சேர்க்கை வாரியம் அறிவித்துள்ளது.

திமோதி கன்சால்வேஸ் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த கூடுதல் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 2018ஆம் ஆண்டு முதல் ஐஐடியில் மாணவியர் சேர்க்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, மாணவிகளுக்கான இட ஒதுக்கீடு சதவீதம் ஆண்டு தோறும் மாற்றி அமைக்கப்படும் என்றும் இதனால் மாணவர்களின் சேர்க்கைக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் மாணவர் சேர்க்கை வாரியம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி