ஆப்நகரம்

காந்தியை சுட்டது கோட்சே தானா? உச்சநீதிமன்றத்தில் வழக்கு

மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றறது கோட்சே தானா என்பது குறித்த வழக்கில், வேறு யாரும் சுட்டதற்கான ஆதாரம் இல்லை என்று டெல்லி உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Samayam Tamil 8 Jan 2018, 1:40 pm
மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றறது கோட்சே தானா என்பது குறித்த வழக்கில், வேறு யாரும் சுட்டதற்கான ஆதாரம் இல்லை என்று டெல்லி உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
Samayam Tamil il seeking reopening of mahatma gandhi assassination
காந்தியை சுட்டது கோட்சே தானா? உச்சநீதிமன்றத்தில் வழக்கு

மகராஷ்டிரா மாநிலம் மும்பயைச் சேர்ந்தவர் டாக்டர் பங்கஜ் பத்னிஸ். அபினவ் பாரத் என்ற அமைப்பின் அறங்காவலரான இவர், மகாத்மா காந்தியை கோட்சே மட்டும் சுடவில்லை என்று டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

அதில், மகாத்மா காந்தியை கோட்சே சுட்டபோது 3 குண்டுகள் மட்டும் பயன்படுத்தியதாகவும், ஆனால், காந்தியின் உடலில் இருந்து 4 குண்டுகள் கண்டெக்கப்பட்டுள்ளதாகவும் சர்ச்சை வாதத்தை முன்வைத்து, விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததாக என்பது குறித்து, மூத்த வழக்கறிஞர் அமரேந்தர் சரண் என்பவர் அறிக்கையை தயார் செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையின் படி, கோட்சேவை தவிர வேறு யாரும் காந்தியை சுட்டதற்கான ஆதாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி