ஆப்நகரம்

மே 17ஆம் தேதி நான் சபரிமலைக்கு செல்லப்போகிறேன்: திருப்தி தேசாய்

எதிர்வரும் மே மாதம் 17 ஆம் தேதி நான் சபரிமலைக்கு செல்லப்போகிறேன் என்று பெண்கள் உரிமை ஆர்வலர் திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 14 Nov 2019, 5:15 pm
சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று தொடரப்பட்டிருந்த வழக்கில் அனைத்துப்பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் முன்பு தீர்ப்பு வழங்கியிருந்தது.
Samayam Tamil trupti_desai


இதனை மறுசீராய்வு செய்யும் வழக்கில் இன்று முடிவை வெளியிட்ட உச்ச நீதிமன்றம் , இந்த வழாக்கு விசாரணையை ஏழு பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றும்படி பரிந்துரை செய்தது.

அதுவரையில், இதற்கு முன் வழங்கப்பட்ட தீர்ப்ப்புக்கு தடை எதுவும் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எழுவர் அமர்வின் தீர்ப்பு வரும்வரை எல்லா வயதுப்பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம். இந்த தீர்ப்பை எல்லோரும் மதிக்க வேண்டும்
திருப்தி தேசாய்,பெண்கள் உரிமை ஆர்வலர்

இந்நிலையில், எதிர்வரும் மே மாதம் 17 ஆம் தேதி நான் சபரிமலைக்கு செல்லப்போகிறேன் என்று பெண்கள் உரிமை ஆர்வலர் திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள பிரபல தர்கா ஒன்றில் பெண்கள் நுழையத் தடை இருந்த போது அதனை எதிர்த்துப் போராடி வெற்றிகண்டவர் இந்த திருப்தி தேசாய்.

சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இதுதான்!

கடந்த ஆண்டும் கூட சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்ற போது கொச்சி விமான நிலையத்திலிருந்து வெளியேற விடாமல் பகதர்கள் தடுத்ததால் சபரிமலை போகாமல் திரும்பிச்சென்றவர்.

தற்போது இந்த ஆண்டும் செல்லவிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து கேட்டபோது “எழுவர் அமர்வின் தீர்ப்பு வரும்வரை எல்லா வயதுப்பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம். இந்த தீர்ப்பை எல்லோரும் மதிக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி