ஆப்நகரம்

கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை; 7 மாவட்டங்களில் நீடிக்கும் ரெட் அலர்ட்!

இன்று பெய்யும் கனமழை காரணமாக, 7 மாவட்டங்களுக்கு விடப்பட்ட ரெட் அலர்ட் திரும்ப பெற வேண்டும் என்று மாநில பேரிடர் மேலாண்மை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Samayam Tamil 11 Aug 2018, 6:10 pm
கோட்டயம்: இன்று பெய்யும் கனமழை காரணமாக, 7 மாவட்டங்களுக்கு விடப்பட்ட ரெட் அலர்ட் திரும்ப பெற வேண்டும் என்று மாநில பேரிடர் மேலாண்மை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
Samayam Tamil Rains


இடுக்கி மாவட்டத்திற்கு வரும் 14ஆம் தேதி வரையும், ஆகஸ்ட் 15 முதல் ஆரஞ்ச் அலர்ட் ஆக மாறுகிறது. ஆழப்புழா மற்றும் கண்ணூருக்கு வரும் 13ஆம் தேதி வரையும், பிற மாவட்டங்களுக்கு வரும் 15ஆம் தேதி வரை ஆரஞ்சு அலர்ட்டிலும் இருக்கும்.

எர்ணாகுளம், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்கள் நாளை வரை ரெட் அலர்ட்டிலும், அதன் பிறகு வரும் 14ஆம் தேதி வரை ஆரஞ்சு அலர்ட்டிலும் இருக்கும். இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, 11, 12 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

வரும் 13, 14 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது 24 மணி நேரத்தில் 12 செமீ முதல் 20 செமீ வரை மழை பொழியக்கூடும். மேலும் மேற்கு மற்றும் மத்திய அரபிக் கடல் நோக்கி மீனவர்கள் யாரும் செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுப் பகுதிகளில் கடல் மிகவும் ஆக்ரோஷமாக காணப்படும். முன்னதாக கல்பெட்டு அருகில் உள்ள முந்தேரி நிவாரண முகாமிற்கு நேரில் சென்ற முதலமைச்சர் பினராயி விஜயன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதார உதவிகள் வழங்க உத்தரவிட்டார்.

கடந்த 8ஆம் தேதி முதல் தற்போது வரை கனமழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 30 பேர் உயிரிழந்துள்ளனர். 54,000 பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

IMD forecasts heavy rain in Kerala; Red alert to stay in 7 districts.

அடுத்த செய்தி