ஆப்நகரம்

பூமிக்கு அடியில் 30 பினாமி லாக்கர்கள்: வருமான வரித்துறை பறிமுதல்

டெல்லியின் சாந்தினி சௌக் பகுதியில் பூமியில் புதைத்து வைக்கப்பட்ட 30 பினாமி லாக்கர்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் 10 நாட்கள் இச்சோதனை நீடிக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Samayam Tamil 3 Dec 2018, 5:53 pm
கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்டில் பினாமி பணபரிவர்த்தறை தடுப்புச் சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்ட திருத்தம் அசையும் மற்றும் அசையா பினாமி சொத்துக்களை ஒழிப்பதற்கு வழிவகுக்கிறது.
Samayam Tamil cash-recovered-bank-income-locker-department-from_480be27e-f229-11e7-9b6a-9c455a15825b


இதன்படி, டெல்லியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்ட சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 பினாமி லாக்கர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சோதனை இன்னும் தொடர்வதால் மேலும் பல பினாமி லாக்கர்கள் கிடைக்கலாம் எனவும் மேலும் 10 நாட்கள் இச்சோதனை நீடிக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுவரை இதேபோல 300 லாக்கர்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அதில் 120 லாக்கர்களில் 25 கோடி ரூபாய் பணம் இருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.

அடுத்த செய்தி