ஆப்நகரம்

ராணுவத்திற்கு உதவ நாட்டு நாய்கள் ரெடி!

முதல் முறையாக நாட்டு நாய்கள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளன.

TOI Contributor 3 Nov 2017, 12:40 pm
டேராடூன்: முதல் முறையாக நாட்டு நாய்கள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளன.
Samayam Tamil in a first desi dogs to get into army
ராணுவத்திற்கு உதவ நாட்டு நாய்கள் ரெடி!


ஜெர்மன் ஷெப்பர்ட், லாப்ரடார் மற்றும் கிரேட்டர் சுவிஸ் மவுண்டன் போன்ற நாய்கள் மட்டுமே இதுவரை இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தன. முதல் முறையாக முதோல் என்ற நாட்டு நாய்கள் ராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளன. வேட்டை நாய்களாகக் கருதப்படும் இவை மிகவும் புத்திக்கூர்மை கொண்டவை ஆகும்.

முதல் கட்டமாக 6 முதோல் நாய்கள் தேர்வு செய்யப்பட்டு கர்நாடகாவில் பயிற்சி அளிப்படுகிறது. அவை பயிற்சியில் சிறப்பாக செயல்படுகின்றன என்றும் டிசம்பரில் ராணுவ பணியில் அவை இணைய உள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எல்லை பாதுகாப்புப் பணி மற்றும் கண்காணிப்புப் பணிகளுக்கு இந்த நாட்டு நாய்கள் ராணுவத்தினருக்கு உதவியாக இருக்கும்.

அடுத்த செய்தி