ஆப்நகரம்

இந்தியாவில் காற்று மாசுபடுவதால் 23 நொடிக்கு ஒரு உயிரிழப்பு ஏற்படும்!!!

இந்தியாவில் காற்று மாசுபடுவதால் 23 நொடிக்கு ஒரு உயிரிழப்பு ஏற்படும்!!!

TOI Contributor 18 Sep 2016, 6:03 pm
எதிர்காலத்தில் சுத்தமான காற்றை சுவாசிப்பது ஒரு கனவாக மாறிவிடும் என்ற நிலையில் தான் தற்போதைய சூழல் உள்ளது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் குறைந்த வயதிலேயே அதிகமான உயிரிழப்பு காற்று மாசுபாட்டினால் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளது. அதாவது 23 நொடிக்கு ஒரு உயிரிழப்பு ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டின் போது இப்போது இருப்பதைவிட காற்றில் நச்சுத்தன்மை அதிகரிக்கும் என்பதால் ஆக்ஸிஜன் சிலிண்டர் வாழ்வின் அங்கமாக மாறிவிடும் என்று கூறப்படுகிறது.
Samayam Tamil in india air pollution claim one life every 23 second
இந்தியாவில் காற்று மாசுபடுவதால் 23 நொடிக்கு ஒரு உயிரிழப்பு ஏற்படும்!!!


தற்போதுள்ள எரிபொருள்கள் காற்றில் கார்பன்-டை-ஆக்ஸைடு, சல்பர்-டை-ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு ஆகியவற்றை கலப்பதால் மோசமான முறையில் காற்று மாசுபட்டுள்ளது. பெரிய நிறுவனங்களின் எரிபொருள் தேவையை தடுக்க முடியாது என்றாலும் இயற்கை வாயுவை பயன்படுத்தினால் இத்தனை வீரியமுள்ள மாசுக்கள் காற்றில் கலக்காது என்றும், காற்று மாசுபடுவது குறையும் என்று கூறப்படுகிறது. இயற்கை வாயுவே காற்று மாசுபடுவதை தடுப்பதற்கான சிறந்த வழி என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அடுத்த செய்தி