ஆப்நகரம்

புதுச்சேரியில் மகாத்மாகாந்தி மருத்துவமனையில் பல் மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

புதுச்சேரியில் அரசு மகாத்மாகாந்தி பல் மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல் மருத்துவர்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 25 Jan 2019, 4:22 pm
புதுச்சேரியில் அரசு மகாத்மாகாந்தி பல் மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல் மருத்துவர்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil pro.


புதுச்சேரியில் உள்ள அரசு மகாத்மா காந்தி பல் மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மகாத்மா காந்தி பல் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் பல் மருத்துவர்களுக்கு தொடர்ந்து 2 மாதங்களாக சரியாக ஊதியம் வழங்கவில்லை.

இது குறித்து பல் மருத்துவர் மோகன்பாபு கூறுகையில், புதுச்சேரியில் கூட்டுறவு சொசைட்டி மூலம் இயங்கும் நிறுவனங்களில் 7 ஆவது ஊதியக்குழு சம்பளம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று தொடர்ந்து 5 ஆவது நாளாக 40 பல் மருத்துவர்கள் மற்றும் இங்கு பணிபுரிந்து வரும் செவிலியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி