ஆப்நகரம்

ஊரடங்கில் ஆணுறை விற்பனை அதிகம்...! ஆண்டு இறுதியில் பிரசவ எண்ணிக்கை உயருமா?

கொரோனா முன்னெச்சரிக்கையாக குளோரோக்வின் மற்றும் வைட்டமின் சி மருந்துகளுக்கு டிமாண்ட் ஏற்பட்டிருப்பதை போல ஆணுறைகளுக்கும் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு மருந்தக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 18 Apr 2020, 7:29 pm
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாள் முழுக்க ஓடி ஓடி உழைத்து குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்காமல் இருந்த பலரும் வீடடங்கி தனது மனைவி, குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகின்றதான சூழல் சமூகத்தில் உருவாகியுள்ளது.
Samayam Tamil தாம்பத்திய உறவு


ஆனால் இந்த சூழ்நிலையிலும் மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் தங்களது அன்றாட பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தவிர்த்து அத்தியாவசிய பணிக்கு அப்பாற்பட்ட தனியார் ஊழியர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் இவர்களுக்கெல்லாம் இந்த ஊரடங்கு தங்களது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்கான பாலத்தை கட்டியுள்ளது. குறிப்பாக கணவன், மனைவி உறவை நெருக்கமாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வரும் மருந்தகங்கள், கடைகள் மற்றும் ஆன்லைன் வர்த்தகங்களிலும் உணவுப் பொருட்கள், முகமூடிகள் மற்றும் மருந்துகளுக்கான தேவை உயர்ந்துள்ள நிலையில், ஆணுறைகளின் விற்பனையும் சிறிது அதிகரித்துள்ளதாக பிரபல ஆங்கில செய்தி நிறுவனங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகப்படியான வேலை பளுவால் ஏற்படும் சோர்வினால் திருமணமான தம்பதிகள் வழக்கமான உடலுறவு கொள்ளாததற்கு ஒரு காரணமாக இருந்ததாகவும், தற்போது கிடைத்துள்ள ஊரடங்கு விடுமுறைகளால் பெரும்பாலான தம்பதிகள் சாதாரண தாம்பத்திய வாழ்க்கைக்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் தொற்றுநோய் பெரிய அளவிலான கவலையைத் தூண்டியுள்ளது. ஆனால் அதே வேளையில் தம்பதியினரிடையே நெருக்கம் அதிகரித்துள்ளது. பிஸியான வாழ்க்கையில் சிக்கி, ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிடாமல் இருந்த தம்பதிகள் தற்போது தாங்கள் விரும்பியவாறு நெருக்கமாக நேரத்தை செலவிடும் நிலை உருவாகியுள்ளதாம்.

ஏர்இந்தியா விமானம் பறக்க போகுது... முன்பதிவும் தொடக்கம்...

கணவன், மனைவி தாம்பத்திய உறவுக்கு பல்வேறு மருத்துவர்கள் கூறியுள்ள அறிவுறுத்தலின்படி, கொரோனா தொற்று இல்லாத சூழலில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பும் இல்லாத தம்பதிகள் வைத்துக்கொள்ளும் உறவுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என விளக்கியுள்ளனர்.

இது குறித்து டெல்லியின் சர் கங்கா ராம் மருத்துவமனையின் (எஸ்ஜிஆர்எச்) மனநல மருத்துவர் ராஜீவ் மேத்தா, '' இந்தியாவில் 2020ம் ஆண்டு டிசம்பரில் அதிக அளவில் பிரசவம் நடக்கலாம் என கூறியிருக்கிறார்.

அடுத்த செய்தி