ஆப்நகரம்

அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற பாஜகவின் பலே ஐடியா!

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கட்சி போராடி வெற்றியடைந்ததையடுத்து, அடுத்த நிதியாண்டில் மத்திய அரசு கிராமப்புறங்களுக்கு அதிக நிதி ஒதுக்கலாம் எனக் கருதப்படுகிறது

TNN 21 Dec 2017, 5:41 pm
குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கட்சி போராடி வெற்றியடைந்ததையடுத்து, அடுத்த நிதியாண்டில் மத்திய அரசு கிராமப்புறங்களுக்கு அதிக நிதி ஒதுக்கலாம் எனக் கருதப்படுகிறது.
Samayam Tamil india budget to focus on rural areas after modis narrow victory at gujrat
அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற பாஜகவின் பலே ஐடியா!


நடந்து முடிந்த குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கட்சி போராடி வெற்றிப் பெற்றது. மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலேயே பாஜக கட்சி சிறப்பாக செயல்படாதது அக்கட்சியினரிடையே மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதில் குறிப்பாக, கிராமப்புறப் பகுதிகளில் பாஜக கட்சி மிகக் குறைந்த அளவே வாக்குகளைப் பெற்றது. இதையடுத்து அடுத்த நிதியாண்டில் விவசாயிகள், கிராமப்புற வேலைவாய்ப்புகள், கிராமப்புற கட்டமைப்புகளை மேம்படுத்த அதிக நிதியை ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2018 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 8 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களும், நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற இருப்பதால், வரும் நிதியாண்டில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி