ஆப்நகரம்

இந்தியாவை பெருமை கொள்ளச் செய்த அந்த நாள்; 20ஆம் ஆண்டில் கார்கில் போரின் நினைவுகள்!

இந்திய ராணுவத்தின் பலத்தை உலகறியச் செய்ய உதவிய கார்கில் போரின் வெற்றி, 20ஆம் ஆண்டை எட்டியுள்ளது.

Samayam Tamil 19 Jul 2019, 1:07 pm
இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து, எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக எத்தனையோ சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பலனில்லை.
Samayam Tamil Kargil War


ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக இருந்த போதிலும், பகைமை மட்டும் விலகிய பாடில்லை. இந்த எண்ணத்தின் உச்சக்கட்டமாக 1999ஆம் ஆண்டு ஒரு நிகழ்வு நடந்தது. அந்த ஆண்டின் மே மாதம் முதல் வாரத்தில் இந்திய எல்லையான கார்கில் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகள் ஊடுருவி ஆக்கிரமிப்பு செய்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த இந்திய ராணுவம், ”ஆபரேஷன் விஜய்” என்ற போர் திட்டத்தை அறிவித்தது. அதன்படி, கார்கில், லடாக் பகுதியில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் தொடங்கியது.

அப்போது நாட்டின் பிரதமர் வாஜ்பாய் பதவி வகித்து வந்தார். மே மாதம் தொடங்கி ஜூன், ஜூலை மாதம் வரை போர் நீண்டது. கடுமையாக நடைபெற்ற சண்டையில் பாகிஸ்தான் ராணுவத்தினர், பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் விரட்டியடித்தது.

இந்த திட்டம் வெற்றி அடைந்ததாக ஜூலை 14ஆம் தேதி பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார். ஆனால் அதிகாரப்பூர்வமாக ஜூலை 26ஆம் தேதி தான் ஆபரேஷன் விஜய் வெற்றி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

ISRO: சந்திரயான் 2 ஏவுதலை நேரில் அருகில் இருந்து எப்படி? வெறும் 2 மணி நேரம் தான்.. ரொம்ப ஈஸி..!
இந்தப் போரில் சுமார் 500 இந்திய ராணுவத்தினர் வீர மரணம் அடைந்தனர். பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதிகள் தரப்பில் சுமார் 3,000 பேர் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் விஜய் வெற்றி ஒவ்வொரு ஆண்டும் “கார்கில் விஜய் திவாஸ்” என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் நிலவும் தொடர் குழப்பம்; சட்டமன்றத்தில் உறங்கிய எடியூரப்பா!

நடப்பாண்டு கார்கில் போரின் 20வது ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று நடக்குமா நம்பிக்கை வாக்கெடுப்பு...தேவகவுடா குடும்பத்தின் பலே திட்டங்கள் இதோ!!

அடுத்த செய்தி