ஆப்நகரம்

நவம்பரில் இந்தியா – சீனா பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

முன்னதாக டோக்லாம் பிரச்சனையின் எதிரொலியாக இருநாட்டுப் பிரதமர்களிடையேயான சந்திப்பு நடைபெற்றது.

Samayam Tamil 27 Oct 2018, 7:52 pm
இந்தியா - சீனா இடையேயான பேச்சுவார்த்தை வரும் நவம்பரில் தேதி குறிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil india-china-flag_e862c3ea-d9e7-11e8-997b-9e013cd77a23


இந்தியாவும் சீனாவும் 3,488 கிலோ மீட்டர் தூர எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. இவ்விரு நாடுகளும் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளில் சுமூகத் தீர்வு காண கடந்த ஆண்டுகளில் 20 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

முன்னதாக டோக்லாம் பிரச்சனையின் எதிரொலியாக இருநாட்டுப் பிரதமர்களிடையேயான சந்திப்பு நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து வரும் நவம்பரில் 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை இருநாட்டு பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யியைச் சந்திக்க உள்ளார்.

தேதி உறுதியான நிலையிலும் எந்த இடத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளது என்ற உறுதியான விவரம் வெளியாகவில்லை. பீஜிங்ஙில் இந்த சந்திப்பு நடைபெறலாம் எனத் தெரிகிறது.

அடுத்த செய்தி