ஆப்நகரம்

கொரோனா தடுப்பூசி: பிரிட்டனுக்கு இந்தியா கண்டனம்!

கொரோனா தடுப்பூசி அங்கீகரிக்கப்படாதது பாரபட்சமான செயல் என்று மத்திய வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ வர்த்தன் சிரிங்கலா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 21 Sep 2021, 6:26 pm

ஹைலைட்ஸ்:

  • விதிமுறையில் மாற்றம் செய்வதாக அந்நாட்டு அரசு உறுதியளித்துள்ளது
  • இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்
கொரோனாவுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், உலக நாடுகள் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. ஆனால், பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன், சைனோஃபார்ம், ஆஸ்ட்ராஜெனிக்கா ஆகிய தடுப்பூசிகளை மட்டுமே அவசரகால பயன்பாட்டுக்காக உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது.
இதனால், இந்தியா, துருக்கி, ரஷ்யா, போன்ற நாடுகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிராக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தாலும், அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களாகவே கருதப்படுவர். எனவே, இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பிரிட்டனின் இந்த செயலை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், தனது பிரிட்டன் பயணத்தையும் ரத்து செய்தார். இந்த நிலையில், பிரிட்டனுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
செருப்புகளை தூக்கவே அரசு அதிகாரிகள்: பாஜக முன்னாள் முதல்வர் சர்ச்சை கருத்து!
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ வர்த்தன் சிரிங்கலா கூறுகையில், “பிரிட்டனில் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி அங்கீகரிக்கப்படாதது பாரபட்சமான செயல். இது, பிரிட்டன் செல்லும் நமது குடிமக்களை பாதிக்கிறது. இது தொடர்பாக பிரிட்டன் அரசிடம் பேசப்பட்டுள்ளது. இந்த விதிமுறையில் மாற்றம் செய்வதாக அந்நாட்டு அரசு உறுதியளித்துள்ளது. இந்த பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் பரஸ்பர நடவடிக்கை எடுக்கும் உரிமை நமக்கு உண்டு” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி