ஆப்நகரம்

இந்தியாவில் பிச்சைக்காரர்கள் பட்டியல் வெளியீடு!

இந்தியாவில் உள்ள பிச்சைக்காரர்கள் குறித்த பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 22 Mar 2018, 12:38 am
இந்தியாவில் உள்ள பிச்சைக்காரர்கள் குறித்த பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
Samayam Tamil dgvnjkmm_1521628312


நாடு முழுவதும் உள்ள பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை குறித்த எழுத்துப்பூர்வமான அறிக்கையை, மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலோட், மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையின் படி, இந்தியாவில் மொத்தம் 4,13,670 பிச்சைக்காரர்கள் உள்ளனர். இவர்களில் 2.21 லட்சம் பேர் ஆண்கள். 19.1 லட்சம் பேர் பெண்கள். அதிகம் பிச்சைக்காரர்கள் இருக்கும் மாநிலங்களில் மேற்கு வங்க மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. அம்மாநிலத்தில் 81,244 பிச்சைக்காரர்கள் உள்ளனர்.

66,000க்கு மேலான பிச்சைக்காரர்களின் மாநிலமான உத்தர பிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது. பீகார் மாநிலம் 30,000க்கு மேற்பட்ட பிச்சைக்காரர்களுடன் முன்றாவது இடத்தில் உள்ளது. அதிசயமாக, தமிழ்நாடு இப்பட்டியலில் 33வது இடத்தில் உள்ளது. காரணம், தமிழகத்தில் 6,800 பிச்சைக்காரர்கள்தான் இருக்கிறார்களாம்!

அசாம், மணிப்பூர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள பிச்சைக்காரர்களில் பெண்கள் அதிகமாக உள்ளனர். யூனியன் பிரதேசங்களான டாமன் - டையூவில் 22 பிச்சைக்காரர்கள்தான் உள்ளனராம். லட்சத்தீவில் இரண்டே பேர் மட்டும்தான் பிச்சை எடுக்கிறார்களாம்.

அடுத்த செய்தி