ஆப்நகரம்

உறிஞ்சப்படும் நி‌லத்தடி நீர்: இந்தியாதான் நம்பர் 1

உலகிலேயே இந்தியாவில்தான் அதிக அளவில் நிலத்தடி நீர் உறிச்சப்படுவதாக அதிர்ச்சிகர புள்ளிவிவரம் வெளியாகி உள்ளது .

Samayam Tamil 9 Jun 2018, 4:54 pm
உலகிலேயே இந்தியாவில்தான் அதிக அளவில்நிலத்தடி நீர் உறிச்சப்படுவதாக அதிர்ச்சிகர புள்ளிவிவரம் வெளியாகி உள்ளது
Samayam Tamil GroundwaterLevelimage


அமெரிக்காவின் ப்யூக் பல்கலைகழகத்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வு விவரங்கள் சூழல் அறிவியல்மற்றும் தொழில்நுட்ப இதழில் வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி முழுவதும் 16 மாநிலங்களில் நிலத்தடி நீரில்,உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த தரஅளவை விட யுரேனியா கலப்பு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.ராஜஸ்தானில் 324 கிணறுகள்மற்றும் குஜராத்தில் மிக அதிக அளவு யுரேனிய அடர்த்தி இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான குடிநீரில் ஒரி லிட்டர்க்கு30மைக்ரோ கிராம் அளவுக்கு யுரோனிய அளவு இருக்கலாம் என்பது உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

அதிக அ‌ளவு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால்‌ ராஜஸ்தானின் மூன்றில் ஒரு கிணற்றில் யுரேனிய செறிவு அதிகம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலத்தடி நீர்மட்டம் பெரிதும் குறைந்துவரும் மாநில‌ங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளின் சராசரியில் தமிழகத்தில் 86.6 சதவிகித அளவுக்கு நிலத்தடி நீர் சரிந்துள்ளது.

அடுத்து பஞ்சாபில் 84.6 சதவிகித அளவுக்கு நிலத்தடி நீர் சரிந்துள்ளது. ஆந்திராவில் 75 சதவிகிதமும், உத்தரப்பிரதேசத்தில் 70.6 சதவிகிதமும், கேரளாவில் 70.1 சதவிகிதமும் நிலத்தடி நீர் சரிந்துள்ளது. நாட்டில் உள்ள கிணறு‌களில் ஒட்டுமொத்தமாக பத்தாண்டுகளில் நில‌த்தடி நீர்மட்டம் 60.7 சதவிகிதம் அளவுக்கு குறைந்துள்ளது.

அடுத்த செய்தி