ஆப்நகரம்

கொரோனா தடுப்பூசியின் விலை என்ன? நிதி ஒதுக்கிய மத்திய அரசு!

கொரோனா தடுப்பூசி செலவுகளுக்காக 50,000 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 22 Oct 2020, 10:40 pm

கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என்பது உறுதியாக தெரிகிறது. தடுப்பூசிக்காக இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் மிகத் தீவிரமாக முயற்சித்து வருகின்றன.
Samayam Tamil covid-19 vaccine


உலகின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள் தொகையை கொண்ட நாடு இந்தியா. இத்தனை கோடி மக்களுக்கு தடுப்பூசி வாங்க அரசு ஏற்கென்வே திட்டமிட தொடங்கிவிட்டதாக தெரிகிறது.

கொரோனா தடுப்பூசி வாங்குவதற்காக இந்தியா 7 பில்லியன் டாலர் (50,000 கோடி ரூபாய்) ஒதுக்கியுள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு நபருக்கும் தடுப்பூசிக்கான செலவு 6 அல்லது 7 டாலர் என மோடி அரசு மதிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கு வெற்றி: ஹேப்பி நியூஸ்!

நடப்பு நிதியாண்டுக்கே கொரோனா தடுப்பூசிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நிதிப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பே இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு தடுப்பூசியின் விலை 2 டாலர் என்பதும், ஒரு நபருக்கு இரண்டு ஊசி போடவேண்டுமென்பதும் மத்திய அரசின் மதிப்பீடு. இதுபோக, சேமிப்பு, போக்குவரத்து செலவுகளுக்காக கூடுதல் 2-3 டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு நபருக்கும் 6 அல்லது 7 டாலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பிஹார் சட்டமன்ற தேர்தலையொட்டி இன்று பாஜக தேர்தல் அறிக்கை வெளியானது. அதில், பாஜக ஆட்சிக்கு வந்தால் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி